Skip to main content

ராணுவத்தினர் கொதிப்பு! ஆள் இல்லா இடத்தில் கேண்டீன்?

Published on 17/03/2018 | Edited on 18/03/2018
ஒரு நேரத்தில் ஜெ.வே தலையிடும் அளவுக்கு முக்கியமான கேண்டீன் இது என்கிறார்கள் பாளையங்கோட்டையில் இயங்கிய மிலிட்டரி கேண்டீன் இடமாற்ற விவகாரம் குறித்துப் பேசுபவர்கள். இங்கு ஹார்டுவேர், தங்கநகைகள் தவிர அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கிடைக்கும். கிட்டத்தட்ட மெகா சூப்பர் மார்க்கெட் போல 1... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

'ஓலமிடும் எச்சரிக்கை அலாரம்-'இஸ்ரேல் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

'Screaming Warning Alarm' - 'Army Warning to the People of Israel'

 

பல நாட்களாக இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையேயான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் மக்களுக்கு ராணுவம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.

 

டெல் அவிவ், ஸ்டீரொட், அஸ்-ஹலான் உள்ளிட்ட நகரங்களில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி காசா பகுதியிலிருந்து வடக்கில் 80 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு முக்கியமான நகரம் தான் இந்த டெல் அவிவ். இது இஸ்ரேலின் மிகப்பெரிய இரண்டாவது நகரமாகும். இந்த நகரத்திலிருந்து இருந்து தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இருக்கிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டுள்ளது. ஹமாஸ் படையினர் டெல்அவிவின் மீது ராக்கெட்களை ஏவ வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதன் அடிப்படையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
 

Next Story

வட்டமடித்து விழுந்து சிதறிய ஹெலிகாப்டர்; பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 Horrifying video footage of a helicopter crashing into a circle

 

ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விண்ணில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நிலை தடுமாறி வட்டமடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் நான்கு அதிகாரிகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குயிட்டோ பகுதியில் ராணுவத் தளவாடங்களை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதியில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் நிலை தடுமாறி சுழன்று வட்டமடித்தது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்தனர். தொடர்ந்து வட்டமடித்த ஹெலிகாப்டர் நிலை தடுமாறி சுற்றிக்கொண்டே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த திடீர் விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.