Skip to main content

நம்ம பெயரைச் சொல்லியிருப்பாரோ... -பயத்தில் கோவை பல்கலை ஊழியர்கள்

Published on 18/02/2018 | Edited on 19/02/2018
தமிழக பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்த விசாரணைக்கு பிள்ளையார் சுழியாய் அமைந்திருக்கிறது, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் அதிரடி கைது. லஞ்ச ஒழிப்புத் துறையின் வளையத்திலிருக்கும் கணபதி, தனக்கு உதவியாக இருந்தவர்களின் பெயர்களை விசாரணையின்போது தெரிவித்திருக்க அதிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மும்மொழிக் கொள்கை சர்ச்சை... கோவை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

KOVAI

 

கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் வேளாண் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்க விருப்பமா என விண்ணப்ப படிவத்தில் இடம்பெற்றிருந்தது சர்ச்சைகள் ஏற்படுத்திய நிலையில், இது சில விஷமிகள் செய்த போலி விண்ணப்பம் என ஷ்ரவன் குமார் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் இந்த இட மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கிருஷ்ணகிரி ஆட்சியர் பிரபாகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பழனி கோயில் நிர்வாக அதிகாரி ஜெயபால் ரெட்டி கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

Next Story

கோவை அருகே பான் மசாலா ரகசிய தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமான முறையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பான்மசாலா தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் கொண்ட மூட்டைகளை  கைப்பற்றினர்.

 

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் எனும் இடத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள 15 அடி சுற்றுச்சுவர் கொண்ட ஒரு ரகசிய தொழிற்சாலையில் ஊர் மக்களுக்கே தெரியாமல் பான் மசாலா உற்பத்திசெய்து வந்தது அப்பகுதி மக்களுக்கே பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
 

panmasala

 

அந்த தொழிற்சாலையில் சட்டவிரோத முறையில் பான் மசாலா உற்பத்தி செய்துவருவதாக எழுந்த புகாரில் நேற்று போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரகசிய தொழிற்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக  பல கோடி மதிக்கத்தக்க பான்மசாலா பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பான்மசாலா மூட்டைகளை கைப்பற்றினர். மேலும் அந்த ஆலையில் வி.ஐ.பி என்ற பெயரில் பான்மசாலா பாக்கெட்டுகள் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

 

இதைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்களுக்கு இப்படி ஒன்று இங்கு நடப்பதே தெரியாது எனவும், இரவில் மட்டும் இந்த பகுதிக்கு லாரிகள், ஆட்டோக்கள் வந்துபோகும் மற்றபடி அங்கு என்ன நடக்கிறது என்றுகூட அதிகம் பேருக்கு தெரியாது எனவும் கூறினர்.

 

panmasala

 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த தொழிற்சாலை டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், இது தொடர்பாக ஆலையின் மேலாளர்  ரகு என்பவரை பிடித்து விசாரித்து வருதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.