Skip to main content

கையாலாகாத காவல்துறையை கண்டித்து போராட்டம்: கே.பாலகிருஷ்ணன் 

Published on 22/02/2018 | Edited on 22/02/2018


 

K Balakrishnan



தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 மாநில மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக பிறந்த ஊரான சிதம்பரத்திற்கு புதன்கிழமை இரவு வருகை தந்தார். இவரை மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் மேளதாள முழங்க வெடிவெடித்து வரவேற்ப்பு அளித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதனைதொடர்ந்து அவர் சிதம்பரம் நகரில் உள்ள அம்பேத்கார், பெரியார், சாமி சகஜானந்தா ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பிஜேபியின் மதவெறி மேலொங்கியுள்ளது. ஆளுநரை கொண்டு போட்டி அரசாங்கத்தை பா.ஜ.க. நடத்தி தமிழகத்தில் வருகிறது. இதை தட்டி கேட்க திராணியல்லாத அரசாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உள்ளது. மேலும் அதிமுக அரசு பாஜகவின் கூர் முனையாக உள்ளது. மக்களுக்கு விரோதமாக நடைபெறும் திட்டங்களையும், செயல்களையும் கண்டித்து இடதுசாரிகள் மட்டுமல்லாத கருத்தை ஏற்றுகொள்கிறவர்களுடன் இணைந்து மக்கள் நலன் காக்க போராட உள்ளோம். தாய்மொழி தினத்தில் மோடி சமஸ்கிருதத்தை விட தமிழ்மொழிதான் சிறந்த மொழி என்று கூறியுள்ளார். ஆட்சிமொழியாகவும், நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை  ஏற்றுகொள்ளாமல் புறக்கனிக்கபடுகிறது. தமிழ்மொழியில் படித்தால் வேலைகிடைக்காது என்று நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும். மேலும் விவசாயம் அழிவு, கல்வி வியபாரம், தொழிலாளர் பிரச்சனை, பாலின அடக்குமுறை, சாதிய பாகுபாடு உள்ளிட்ட அனைத்து கொடுமைகளையும் எதிர்த்து தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.
 

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதேபோல் மக்கள் நலன் காக்கும் பிரச்சணையிலும் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். கர்நாட தேர்தல் வர இருப்பதால் மோடி ஓட்டுக்காக காவேரி ஆணையத்தை அமைக்கமாட்டார். கமலும்,ரஜினியும் மக்கள் நலனுக்கு என்ன செய்ய போகிறார்கள். கொள்கைகள் என்ன என்று தெளிவுபடுத்தவில்லை. இருவரும் மதவெறி தூண்டுதல் பற்றியும், சாதிய கொடுமைகள் பற்றியும், ஆணவ கொலைகள், பொருளாதர சீர்கேடு,சாதிமறுப்பு திருமணம்  உள்ளிட்டவைகளுக்கு அவர்களின் நிலைபாடு என்னா என்று தெளிவுபடுத்த வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
 

தமிழகமெங்கும தாலிசெயின் அறுப்பு, கொலை, கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க திராணியில்லாத கையாலாக காவல் துறையினர். தமிழக நலனை கருதில்கொண்டு போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தூத்துக்குடி மாநாட்டுக்கு அனுமதி பெற்று ஜனநாயக முறையில் பேரணி சென்ற செந்தொண்டர்கள் மீது ஆனியுடன் இருந்த சென்டரிங் பலகையை எடுத்து தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டனத்திற்குறியது. காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போல் இருக்ககூடாது. சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்றார்.
 

காளிதாஸ்

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றி துரைசாமி உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Chief Minister personally paid tribute to Vetri Duraisamy

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்று (12.02.2024) மீட்கப்பட்டது. தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து இன்று (13.02.2024) சென்னை கொண்டு வரப்பட்டது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வைகோ, அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், வி.கே. சசிகலா, கே. பாலகிருஷ்ணன், சீமான், அன்புமணி ராமதாஸ், முத்தரசன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Next Story

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Black Flag Demonstration Against Governor-Marxist Communist State Secretary K. Balakrishnan Announcement

 

சுதந்திரத்திற்காகவும் போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சமீபமாக ஆளுநரின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் மறுத்துள்ளதால், நாளை அவர் பங்கேற்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வரும் ஆளுநருக்கு எதிராக நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதற்கும், விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுப்பதைக் கண்டித்தும் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.