Skip to main content

ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற பள்ளி வேன்: குழந்தைகளை தவிக்கவிட்டு தப்பியோடிய ஓட்டுநர்!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
skol


ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற பள்ளி வேனில், குழந்தைகளை அப்படியே தவிக்கவிட்டு ஓட்டுநர் மட்டும் தப்பியோடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்குச் சொந்தமான வேன், பொன்னாபுரத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, காந்தி காலணி ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே வேன் வந்தபோது, திண்டுக்கல் – பழனி மார்க்கத்தில் சரக்கு ரயில் வந்துள்ளது. ரயிலை கவனித்த வேன் ஒட்டுனர், அதற்குள் வேகமாக ரயில் பாதையை கடக்க நினைத்து வேனை இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பழுதாகி நடு ரயில் பாதையில் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வேன் ஓட்டுனர், வேனை இயக்க முயற்சி செய்து பார்த்துள்ளார். முயற்சி தோல்வியடையவே, வேனை அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து தான் மட்டும் இறங்கி தப்பி சென்றுவிட்டார். வேனில் இருந்து ஓட்டுநர் இறங்கி ஒடியதை கண்டு பள்ளிக் குழந்தைகள் செய்வதறியாது பயத்தில் கதறித்துடித்தனர்.

இந்தநிலையில், ரயில்பாதையின் நடுவே வேன் நிற்பதைக் கண்ட ரயில் ஓட்டுனர் துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சதுர்யமாக செயல்பட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுனரை பொதுமக்கள் பாராட்டினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

44 மாணவர்களுடன் புறப்பட்ட பள்ளிப் பேருந்து; பற்றி எரிந்த தீ

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
school bus suddenly caught incident on the road

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல் குட்டை பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆலங்காயம், வாணியம்பாடி பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பலநூறு மாணவ – மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்காகப் பள்ளி நிர்வாகம் கட்டண பேருந்து இயக்கி வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்ததும் 4.30 மணியளவில் 44 மாணவ – மாணவிகள், மூன்று ஆசிரியர்களைப் பள்ளியிலிருந்து ஏற்றிக்கொண்டு வெள்ளக்குட்டை நோக்கி புறப்பட்டது பள்ளிப் பேருந்து. பள்ளி வளாகத்தை விட்டு பேருந்து வெளியே வந்து சென்று கொண்டிருந்தபோது வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புப் பள்ளம் என்கிற இடத்தின் அருகே திடீரென பேருந்து நின்றது. மீண்டும் ஸ்டார்ட்டாகவில்லை. பேருந்து ஓட்டுநர் கீழே இறங்கி பேட்டரி செக் செய்தபோது, பேட்டரி ஒயர் சார்ட்ஷர்குட்டாகி எரியத் தொடங்கியது.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன ஓட்டுநர் உடனடியாக ஓடிச்சென்று பேருந்தில் இருந்த குழந்தைகள், பிள்ளைகளைப் பேருந்திலிருந்து இறங்கச் சொல்லி கத்தினார். மாணவ – மாணவிகள் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து தங்களது புத்தகப் பையை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடினர். அப்போது பேருந்துக்குள் புகை அதிகரிக்கத் துவங்கியது, பள்ளிப் பிள்ளைகள் அலறியபடி பேருந்திலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். அடுத்த இரண்டு நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து திகுதிகுவென எரியத் துவங்கியது.

சாலையில் பேருந்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயணைப்பு நிலையத்துக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். ஆலங்காயத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் வருகை தந்து 1 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். அணைக்கப்பட்ட பேருந்துக்குள் பள்ளிப் பிள்ளைகளின் வாட்டர் பாட்டில்கள், சாப்பாடு டப்பாக்கள் எரிந்தும் உருகியும் பல இருந்தன. இது குறித்து ஆலங்காயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப் பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்குவதற்கு முன்பு மே, ஜூன் மாதங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்களால் தங்களது லிமிட்டில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பேருந்துகள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வுகள் மேம்போக்காக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும் ஒரு பேருந்துக்கு இவ்வளவு என ரேட் பிக்ஸ் செய்து அதனை வாங்கிக்கொண்டு ஆய்வு செய்ததுபோல் பேருந்து நன்றாக இருக்கிறது எனச் சான்றிதழ் தந்து அனுப்பி விடுகின்றனர் அதிகாரிகள். அப்படி ஆறு மாதத்துக்கு முன்பு மேம்போக்காக ஆய்வு செய்யப்பட்ட சரியாகப் பராமரிக்காத இந்தப் பள்ளிப் பேருந்து தீப்பற்றி முழு பேருந்தும் எரிந்துள்ளது எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பேருந்து தீப்பிடிக்கும் போது உள்ளே பள்ளிப் பிள்ளைகள் இருந்தனர். ஓட்டுநரின் சமயோஜித்தால் உடனடியாக அவர்களை அவசர அவசரமாகக் கீழே இறக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்றால் பிள்ளைகள் உயிர்த் தப்பினர்.