Skip to main content

"காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்" - கவனம் ஈர்க்கும் பா. ரஞ்சித் பட ட்ரைலர்!  

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

writer movie trailer released

 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் 'ரைட்டர்' படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார்.  இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் ரைட்டர் படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.  ஒரு நேர்மையான போலீசுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்