Skip to main content

தமிழ்நாட்டில் அழிந்து வரும் இரண்டு....விவேக் போட்ட டுவீட்

Published on 17/03/2018 | Edited on 19/03/2018
vt


டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும், மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும் சினிமா மற்றும் விவசாய பிரச்சனையை குறித்து நடிகர் விவேக், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில்..."தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"தெருவுல போறவன்லாம் தலய கலாய்க்கலாமா?" நடிகர் விவேக் சிறப்பு பேட்டி (வீடியோ)

Next Story

படம் பார்த்தால் டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி ! 

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
ezhumin

 

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. நடிகர்கள் விவேக், தேவயானி இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 18ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு வெளிவர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். அப்போது விழாவில் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது...

 

 

 

"விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும். முதலில் ஒரு புதிய படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசையமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார்.