Skip to main content

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல்  என்ட்ரியா? - விளக்கமளித்த விஷால் 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

vishal explained her political rumor

 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார். லத்தி படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இதனிடையே நடிகர் விஷால் வரவிருக்கும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் குப்பம் தொகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது ஆந்திரா மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் இதை முற்றிலும் மறுக்கிறேன். இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே நடிப்பது எனது எண்ணம். அரசியலில் ஈடுபடுவதோ அல்லது சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடுவதோ எனது எண்ணம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்