Skip to main content

ரசிகர்களை மகிழ்விப்பதில் தீவிரம் காட்டி வரும் விஜய்!

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

vijay joined instagram

 

நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் இருக்கும் விஜய், நேற்று இன்னொரு தளமான இன்ஸ்டாகிராமிலும் இணைந்தார். கணக்கு தொடங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களை அடைந்திருந்தார். இப்போது வரை 4.1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார். முதல் பதிவாக, தற்போது நடித்து வரும் லியோ பட லுக்கில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். மேலும் அதே லுக்கில் இன்னொரு புகைப்படத்தை ஸ்டோரியில் வைத்தார்.

 

இந்த கணக்கு மூலம் தன் படங்களின் அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது. ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் விஜய், கடந்த வருடம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். வாரிசு பட ஆடியோ விழாவில் மேடையில் மட்டும் ஏறி பேசிவிட்டு செல்லாமல் அரங்கத்தில் இருக்கும் ரசிகர்களை பார்க்கும் விதமாக சுற்றி வந்து மகிழ்வித்தார். அண்மையில் ஒரு குழந்தை விஜய்யை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்தக் குழந்தையின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராமிலும் மகிழ்விப்பதை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay (@actorvijay)

 

 

சார்ந்த செய்திகள்