Skip to main content

விக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த நிறுவனத்தின் பெயர் ரௌடி பிக்சர்ஸ். அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ்தான் நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் என்கிற த்ரில்லர் படத்தை இயக்குகிறார். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இதில் கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.
 

vignesh shivan

 

 

மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான  ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. அண்மையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் விக்னேஷ் சிவனும், நயன்தாரா இருவரும் ஒன்றாக எடுத்துகொண்ட செல்ஃபீ புகைப்படம் வெளியானது.
 

super duper


இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அனிருத், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா போன்ற பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், தரண்குமார் மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

சார்ந்த செய்திகள்