Skip to main content

"மறக்குமா நெஞ்சம்..." - வெளியான சிம்பு பட அப்டேட்

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Vendhu Thanindhathu Kaadu next song release date announced

 

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

ad

 

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்த பாடலான மறக்குமா நெஞ்சம் பாடல் வரும் 14 ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்