Skip to main content

'வெந்து தணிந்தது காடு' படம் வெளியாவதில் சிக்கல்? படக்குழு கொடுத்த விளக்கம்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Vendhu Thanindhathu Kaadu movie issue

 

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நாளை (15.9.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'சூப்பர் ஸ்டார்' என்ற பெயரில் பட இயக்க முன்பணம் ரூ.2.40 கோடி  பெற்ற அதே கதையைத்தான் வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் கௌதம் மேனன் இயக்கிய உள்ளதாக கூறி இப்படத்தை வெளியிட தடை கோரி ஆன்இன்  பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்  கௌதம் மேனன் தரப்பு சமரசம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது. மேலும் தான் முன்பணமாக பெற்ற ரூ. 2.40 கோடியை அடுத்த படம் இயக்குவதற்கு முன்பு வழங்குவதாக கெளதம் மேனன் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால்  படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் எனப் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்