Skip to main content

அஜித்தின் 'வலிமை'யுடன் மோதும் விஷால்?

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

valimai and veeramae vaagai soodum movies release pongal festival

 

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. 

 

இதனிடையே நடிகர் விஷால் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்திருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படம்  வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 

 

இந்நிலையில் இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'ராதே ஷ்யாம்' ஆகிய இரு படங்களின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 'வீரமே வாகை சூடும்' படத்தை பொங்கல் பண்டிகை (14.1.2021) அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்