Skip to main content

"நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை" - பாரதிராஜாவைப் பார்த்த வைரமுத்து ட்வீட்

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

Vairamuthu tweets about seeing Bharathiraja

 

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பாரதிராஜாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாரதிராஜா விரைவில் குணமடைய திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் வைரமுத்து பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன். விரைவில் மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.   

 


 

சார்ந்த செய்திகள்