Skip to main content

நல்ல செய்தி, கெட்ட செய்தியை பகிர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 

tom rita

 

 

அண்மையில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேன்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிடா வில்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதன்பின் அவரே ட்விட்டரில் எங்கள் இருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அதனால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டாம் ஹேன்க்ஸ் கரோனா பாதிப்பு குறித்து புது தகவலை தெரிவித்துள்ளார். அதில்,“ஹேய் ஃபோல்க்ஸ். நல்ல செய்தி: கரோனா உறுதி செய்யப்பட்டு ஒரு வாரமாகியுள்ளது. தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். அறிகுறிகள் அப்படியேதான் உள்ளது. காய்ச்சல் இல்லையென்றாலும் போர் அடிக்கிறது. சலவை துணியை மடிப்பது மற்றும் சமைப்பதால் சோர்வாகி கட்டிலில் உறங்குவது என்று போய்க்கொண்டிருக்கிறது. கெட்ட செய்தி: என்னுடைய மனைவி ரிடா வில்சன் தொடர்ச்சியாக ஆறு முறை ரம்மியில் வெற்றிபெற்று 201 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார். எனக்கு பிடித்த டைப் ரைட்டருடன் நான் இங்கு பயணம் மேற்கொண்டேன். நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்