Skip to main content

தீபாவளியை முன்னிட்டு தனுஷுக்கு வேண்டுகோள் வைத்த திரையரங்கு உரிமையாளர்! 

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

dhanush

 


‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' படம் மே 1ஆம் தேதி ரிலீஸாகுவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்தது படக்குழு. அதனை தொடர்ந்து, தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, தற்போது ‘ரகிட ரகிட’ எனும் முதல் பாடலை வெளியிட்டது. மோஷன் பிக்சர் ரிலீஸாகும்போது அனைவரையும் கவர்ந்தது இந்த ரகிட ரகிட பி.ஜி.எம்.

 

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

 

சூரரைப்போற்று படத்தை போல ஓடிடியில் படம் ரிலீஸாக அதிக வாய்ப்பு உள்ளது என்று தொடக்கத்தில் தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் சசி இதை திட்டவட்டமாக மறுத்தார். தற்போது திரையரங்குகள் 50 சதவித பார்வையாளர்களுடன் தொடங்கப்படலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து தீபாவளிக்கு ஜகமே தந்திரம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவுக்கு திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “தீபாவளிக்கு அதிகரித்து வரும் தேவையை மனதில் வைத்து, நடிகர் தனுஷும், தயாரிப்பு நிறுவனமும் 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தை வெளியிடுவார்கள் என நம்புகிறேன். ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு ஈர்க்க சரியான திரைப்படமாக இருக்கும். 50 சதவீதம் என்கிற விதிமுறை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்