Skip to main content

‘பொன்னியின் செல்வன்’ படத்தை திரையரங்கில் பார்த்த தமிழக ஆளுநர்

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

tamilnadu governor watched ponniyin selvan movie

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இதுவரை பொன்னியின் செல்வன் படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.  இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.  இதனிடையே ராஜராஜ சோழன் இந்து என்று ஒரு தரப்பினரும், இந்து இல்லை என்று ஒரு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வேளச்சேரியில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துள்ளார். சமீபகாலமாக  தமிழர் கலாச்சாரம், குறித்தும் திருக்குறள் குறித்தும் பேசி வரும் ஆர்.என்.ரவி, தற்போது தமிழ் பேரரசான சோழர்களின் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்