Skip to main content

மீண்டும் ஓடிடி பக்கம் திரும்பும் சூர்யா!

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

surya41 movie direct ott release


 

'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து  நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான 'பிதாமகன்', 'நந்தா' ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு  கன்னியாகுமரி பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா 41 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரபல ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது மீண்டும் சூர்யாவின் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்