Skip to main content

அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

suriya and karthi visits ajith at his home for ajith father passed away

 

நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) கடந்த 24ஆம் தேதி அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் நேரில் சென்றோ அல்லது சமூக ஊடகங்களில் பதிவிட்டோ ஆறுதல் கூறி வருகின்றனர்.  

 

நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா, சிம்பு உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர். ட்விட்டர் பக்கம் வாயிலாக கமல், விக்ரம், சிம்பு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர்.  

 

இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்