Skip to main content

"கல்வியை விளம்பரமாக்குவது சமுதாயத்திற்கு என்றுமே நல்லதில்லை" - நடிகர் சூரி காட்டம்

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

soori explain education scholarship fake news

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் சூரியின் அறக்கட்டளை சார்பாக பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவரது புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரவியது. 

 

இந்நிலையில் இந்த விளம்பரம் போலியானது என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்த விளம்பரத்துக்கும், எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த திரைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்டது. அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர். விளம்பரம் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறோம். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நங்கள் செய்யும் கல்வி உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம், இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரம் தந்து புனிதமான கல்வியை விளம்பரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு என்றுமே நல்லதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்