Skip to main content

சிவகார்த்திகேயன் கனவை நினைவாக்கிய ஓவியம்!

Published on 17/03/2018 | Edited on 19/03/2018

siva painting


வேலைக்காரன் வெற்றிக்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். முன்னணி நடிகராக வலம் வரும் இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் விருது பெற்றபோது அந்த தருணத்தை பகிர்ந்துகொள்ள தன்னுடன் அப்பா இல்லை என வறுத்தப்பட்டு மேடையிலேயே கண் கலங்கினார். தந்தை மீது அதிகமாக பாசம் கொண்ட அவருடைய அப்பா சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். இந்நிலையில் விருது வாங்கிய தருணத்தை அப்படியே கண் முன் கொண்டு வரும் விதமாக சிவகார்த்திகேயனுடன் அவரது தந்தை நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில் மகனின் சினிமா விருது கேடயத்தை கையில் வைத்துக் கொண்டு தந்தை நிற்பது போலவும், உடன் இருக்கும் சிவகார்த்திகேயன் சிரித்த முகத்துடன் மைக்கில் பேசிக் கொண்டிருக்க்கும் போலவும் அந்த ஓவியம் உள்ளது. இதை கண்டு நெகிழ்ந்த  சிவகார்த்திகேயன் அந்த ஓவியத்திற்கு பதில் டுவிட் போட்டார். அதில்...."உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை. அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது எனக்கு ஸ்பெஷலானது. நன்றியம்மா. 'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னேஎன்று பதிவிட்டுருந்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இனி என் படங்களில் அந்த காட்சி இருக்காது... சிவகார்த்திகேயன் உறுதி!

Published on 02/04/2018 | Edited on 03/04/2018
sivakarthikeyan


இன்றைய தலைமுறை சினிமாவில் சொல்லிக்கொள்ளும் படி உச்சத்தை அடைந்தவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலத்தில் முற்றிலும் பொழுதுபோக்கான படங்களில் மட்டும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த அவர் தற்போது சமூக அக்கறை கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் சமூக கருத்துக்களோடு வெளிவந்த வேலைக்காரன் திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என சமூக அக்கறையோடு அறிவித்திருந்தார் சிவா. இந்நிலையில், தற்போது இதே போல் சமூக அக்கறை கொண்ட இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்..."முன்பு டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்தேன். ஆனால், இப்போது தான் அதன் கொடிய தாக்கம் எனக்கு புரிகிறது. போதும்... இனி என் படங்களில் இந்த மாதிரி எந்த காட்சியும் இருக்காது. என் இயக்குனர்களும் இனி இதுபோன்ற காட்சிகளை எனக்கு மட்டும் அல்ல, வேறு படங்களுக்கும் வைக்க மாட்டார்கள்" என்று உறுதிபட அறிவித்துள்ளார்.