Skip to main content

சிம்பு பட விழா; கமல்ஹாசனுக்கு அழைப்பு

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

simbu in vendhu thanindhathu kaadu chief guest asa kamalhaasan

 

கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் மூன்று பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் ரிலீஸ் வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை ஐசரி கணேஷ் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.  

 

இதனிடைய இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், அதற்கான லீட் காட்சியை படத்தின் இறுதியில் வரும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்