Skip to main content

ஒரே நாளில் இரண்டு அப்டேட் - வேகமெடுக்கும் சிம்பு

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

simbu movie Vendhu Thanindhathu Kaadu, Pathu Thala movie update released

 

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவு பெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் டப்பிங் பணிகளை சிம்பு முடித்துள்ளார். இதனைத் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சிம்பு. இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே  கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் தொடங்கியுள்ளது. இதனை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    

 

 


 

சார்ந்த செய்திகள்