Skip to main content

“இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை” - ஆர்.வி.உதயகுமார்  

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
rv udhayakumar speech in pagalariyaan

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், வெற்றி நாயகனாக நடித்துள்ள படம்  பகலறியான். இதில் அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். விவேக் சரோ இசையமைத்துள்ளனர். மே 24 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, “ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாக சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிகர் வெற்றி மிக தனித்துவமானவராக, தனக்கு பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை.  இம்மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளைத் தேடி, தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.  டிரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது.  இப்படத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கும் குழுவிற்கும் என் வாழ்த்துகள்” என்றார். 

இயக்குநர் பேரரசு பேசியதாவது, “பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாக படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார். ஒரு புதுமையான கதையில் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார். 
 

சார்ந்த செய்திகள்