Skip to main content

நயன்தாரா பட ரிலீஸை உறுதிப்படுத்திய இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி! 

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

nayanthara

 

 

எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆர். ஜே. பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகும் மற்றொரு படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் மூலம் ஆர்.ஜே. பாலாஜி இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். என்.ஜே. சரவணன் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்குகிறார் பாலாஜி.

 

இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுவதும் நயன்தாராவின் கதாபாத்திரம் பயணிப்பதுபோல இருப்பதாக முன்பே செய்திகள் வெளியாகின. மேலும், ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர். எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஐசரி கணேஷ்தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார். 

 

மே 1ஆம் தேதி படம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இப்படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் திரையரங்குகளும் தற்போது திறக்கப்படாததால் படத்தின் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய  படக்குழு திட்டமிட்டிருந்ததாக முன்பே செய்திகள் வெளியாகின. தற்போது இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்.ஜே. பாலாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு ஹாட்ஸ்டார் விஐபியில் ரிலீஸாகுவதாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்