Skip to main content

தேர்தல் நிறுத்தம்... பதிவாளர் அதிரடி உத்தரவு...

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் தென்சென்னை மாவட்ட பதிவாளர் இத்தேர்தலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
 

vishal

 

 

டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார். இவ்வாறு தற்போதையை நடிகர் சங்கத் தேர்தல் குழு அறிவித்திருந்தது. ஆனால், இக்குழு கல்லூரியில் தேர்தல் நடத்த எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும். இதற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்காது என்று சொல்லப்பட்டது. 
 

இதனையடுத்து சங்கரதாஸ் அணியை சேர்ந்த எஸ்.வி.சேகர் அன்றைய தினத்தில் அந்த கல்லூரியில் அல்வா என்றொரு நாடகத்தை நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார். நீதிமன்றமும் நேற்று மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் இதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியது.
 

இந்நிலையில் இன்று,  ‘தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதால் இந்த தேர்தலை நிறுத்த வேண்டும்’ என்று உத்தரவு அளித்துள்ளார் தென்சென்னை மாவட்ட பதிவாளர்.

 

 

சார்ந்த செய்திகள்