Skip to main content

ரிலீசுக்கு முன்பே சாதனை ; கமல் கேரியரில் முதல் இடம் பிடித்த 'விக்ரம்'

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

Record before release; 'Vikram' first place in Kamal's career

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஜூன் 3-ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே 'விக்ரம்' படத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அமர்' என்ற கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு ட்ரைலரில் அவர் பேசும் வசனத்தை குறிப்பிட்டு ஒரு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது. இந்நிலையில், இதுவரை வெளியான கமல் படங்களில் 'விக்ரம்' படம் தான் ரிலீசுக்கு முன்பு அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள படம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை உட்பட ரூ.200 கோடிக்கு மேலாக பல மொழிகளில் விற்பனையாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.    

 

 

 

சார்ந்த செய்திகள்