Skip to main content

ரயில் நிலையத்தில் பாடியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரு வீடியோவால் ரூ. 55 லட்சத்துக்கு வீடு!

Published on 28/08/2019 | Edited on 19/09/2019

மேற்குவங்க மாநிலத்திலுள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பாட்டு பாடி காசு வாங்கும் ரனு மண்டல் என்ற வயதான பெண், பிரபல பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவரின் வாய்ஸில் மெய் சிலிர்த்துப்போன ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
 

ranu mandal


சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ வைரலாக பரவியது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வைரலான அந்த பெண் ரனு மண்டலை அழைத்து பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பாடும் வாய்ப்பளித்தது. அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பளித்துள்ளார். 

ரயில் நிலையலத்தில் பாட்டு பாடி வந்த பெண்ணுக்கு படத்தில் பாடும் வாய்ப்பை அளித்த ஹிமேஷ் ரேஷ்மியாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ஹிமேஷ் ரேஷ்மியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
 

sixer ad


ரனு மண்டலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்துள்ளதாகவும், மேலும் அவர் அடுத்ததாக நடித்துவரும் தபங் 3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்