Skip to main content

விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த லேடி சூப்பர் ஸ்டார்...

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

108 திவ்யபிரபந்தங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் முதல் 31 நாட்கள் சயனக்கோலத்திலும் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
 

nayanthara

 

 

இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் கூட பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
 

இதுவரை அத்திவரதரை தரிசிக்க பல திரை பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இக்கோவிலுக்கு வந்துள்ள நிலையில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். 

 

 

சார்ந்த செய்திகள்