Skip to main content

ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா...

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

எல்.கே.ஜி படத்தின் மூலம் கதாநாயகனாகவும், கதை ஆசிரியகராகவும் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி அறிமுகமாகினார். இந்நிலையில் அவர் தனது இரண்டாவது கதையை எழுதியுள்ளார். இந்த கதையிலும் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும், நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

rj balaji with nayanthara

 

 

கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, நாஞ்சில் சம்பத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் எல்.கே.ஜி. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆர்.ஜே.பாலாஜி தனது நண்பர்களுடன் இணைந்து எழுதியிருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்துதான் ஆர்.ஜே. பாலாஜி தனது இரண்டாவது படத்திற்கான கதையை நண்பர்களுடன் இணைந்து எழுதினார். ஆர்.ஜே.பாலாஜியின் முதல் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது போலவே இந்த படத்தையும் தயாரிக்கின்றனர்.
 

miga miga avasaram


தற்போது இந்த படத்திற்கான எழுத்து வேலைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது. ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கை ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா கதாபாத்திரத்தை மையமாகவைத்துதான் இப்படத்தின் கதை நகருமாம்.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாராவும், ஆர்.ஜே. பாலாஜியும் இணைந்து நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்