Skip to main content

சர்கார் பட நடிகர்களை மிரட்டிய முருகதாஸ் !

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
ar murugadoss

 

 

 

விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களிடையே ஹிட்டடித்தது. இந்நிலையில் படத்திற்கான பிரமோஷன் பணிகளை படக்குழு தற்போது ஆரம்பித்ததை அடுத்து 'சர்கார்' படத்தில் நடித்த பல ஜுனியர் நடிகர்கள் படத்தை பற்றி பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் சிலர் ஆர்வமிகுதியில் படம் குறித்த எஸ்க்குளுசிவ் தகவல்களையும் வெளியிட்டு வருவதை ஏ.ஆர் முருகதாஸ் கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் கடும் கோபமடைந்த ஏ.ஆர் முருகதாஸ் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது... "கடும் உழைப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தை குறித்து இனி ஜுனியர் ஆர்டிஸ்ட் யாராவது எங்களுக்கு தெரியாமல் நெறிமுறையற்ற முறையில் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"  என கண்டித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்