Skip to main content

"கங்கனா ஒரு பிரபலமாக இருக்கலாம், ஆனால்..." - கடுமையாக சாடிய நீதிமன்றம்  

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

mumbai court dismissed kangana ranaut petition

 

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத் . இவர் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வழக்குகளில் சிக்கி கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை பற்றி அவதூறாக நடிகை கங்கனா பேசியதாக பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க கோரி நடிகை கங்கனா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது பணியை கருத்தில் கொண்டு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. 

 

இதனை விசாரித்த நீதிமன்றம் கங்கனா ரணாவத்   மனுவை தள்ளுபடி செய்ததோடு, குற்றம்சாட்டப்பட்டவர் தனது சொந்த காரணங்களை காட்டி சட்ட விதிமுறைகளில் இருந்து விலக்கு பெற முடியாது. கங்கனா பிரபல நடிகையாக இருக்கலாம். ஆனால் இந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் எனக் கடுமையாக சாடியுள்ளது. மேலும் இவ்வழக்கில் அவர் நிரந்தரமான விலக்கு கோர முடியாது என்றும்,  கங்கனா ரணாவத் முறையாக ஜாமீன் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்