Skip to main content

திருட்டுத்தனமாக படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த 'மாஸ்டர்' படக்குழு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

bdsgdsg

 

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்தது. மேலும் சில சமூக ஊடகங்களிலும் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இது திரையுலகினரைப் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபரை படக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

மாஸ்டர் படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையைத் தொடங்கி நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சோனி டிஜிட்டல் நிறுவனத்திடம் திரைப்படத்தின் காப்பியை படக்குழு கொடுத்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் திருட்டுத்தனமாகப் படத்தைப் பதிவுசெய்து கசிய விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனமும் உதவிசெய்ய முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்