Skip to main content

வெற்றிமாறனுடன் மீண்டும் இணைந்த மஞ்சு வாரியர்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

manju warrier and attakathi dinesh joins viduthalai 2

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விடுதலை பாகம் 1'. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. படத்தைப் பார்த்த திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படக்குழுவினரைப் பாராட்டியிருந்தனர். மேலும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர். 

 

இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக சூரி தெரிவித்தார். பின்பு இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அண்மையில் விடுதலை இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனவும் வெற்றிமாறன் செய்தியாளர்கள் முன்பு தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனுடன் நடிகை மஞ்சு வாரியர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அட்டகத்தி தினேஷும் இடம்பெற்றிருக்கிறார். இதனால் விடுதலை 2வில் மஞ்சு வாரியர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் தினேஷும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.   

 


 

சார்ந்த செய்திகள்