Skip to main content

மணிரத்னம் உடல்நிலை குறித்த வதந்தி... முற்றுபுள்ளி வைத்த ஜக்கி வாசுதேவ்...

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வதந்தி ஒன்று பரவியது. இதனையடுத்து இந்த வதந்திக்கு பதிலடி தரும் வகையில் மணிரத்னத்தின் மனைவி சுகாசினி சூசகமாக ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், “மணிரத்னம் அவருக்கு பிடித்த உணவுகளை எடுத்துக்கொண்டு அடுத்த படத்திற்கான திரைக்கதை டிஸ்கஸ் செய்ய அலுவலகம் சென்றிருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
 

maniratnam

 

 

சுகாசினியின் இந்தப் பதிவின் மூலம், மணிரத்னம் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 

இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மணிரத்னம் கோல்ஃப் விளையாடும் புகைப்படங்களை ஜூன் 19ஆம் தேதி பகிர்ந்துள்ளார் சுகாசினி. “இன்று காலை யார் கோல்ஃப் விளையாடுகின்றனர் என்று யோசியுங்கள்... மணியும் சத்குருவும்தான். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் சுகாசினி.

 

 

சார்ந்த செய்திகள்