Skip to main content

"30 வருடங்களுக்கு பிறகு" - மெகா கூட்டணி அமைக்கும் மணிரத்னம் ரஜினி?

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

manirathnam next with rajini

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகிவுள்ளது. அதன்படி ரஜினிகாந்துடன் மணிரத்னம் இணையவுள்ளதாகவும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ரஜினியுடன் மணிரத்னம் இணையவுள்ளார். ஏற்கனவே ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணியில்கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான 'தளபதி' படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு படமும் ரஜினிகாந்த் நடிக்க ஓகே சொல்லியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் எந்த படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் இணையவுள்ளார் என்பது தெரியவில்லை. எனவே விரைவில் ரஜினி தரப்பிடம் இருந்து தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்