Skip to main content

'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர் !

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Malayalam actor chemban vinod joins 'Vikram movie

 

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

இரண்டு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு சமீபத்தில், கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மூவரும் இருக்கும் போஸ்ட்டரை வெளியிட்டது.  மிரட்டலான இந்த போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

 

இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார்.  அதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான 'கோலி சோடா 2' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

 

 

சார்ந்த செய்திகள்