Skip to main content

“வெற்றிமாறன் பார்வையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது” - நடிகை குஷ்பூ விமர்சனம்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

kushboo talk about vetrimaaran speech

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு,  “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து பேசிய குஷ்பூ, “அவரவர் மனதில் என்ன இருக்கிறதோ, அப்படித்தான் அவர்களது பார்வை இருக்கும். உலகம் உருண்டை என்று நினைத்துப் பார்த்தால், உருண்டையாகத்தான் இருக்கும், இல்லை சதுரங்கமாக இருக்கும் என்றால், சதுரங்கமாகத்தான் இருக்கும். அதனால் அவரவர் பார்வையில் தான் பிரச்சனை இருக்கிறது. வெற்றிமாறன் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் ஏதாவது தவறு கண்டுபிடிக்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது. என்னுடைய பார்வையிலிருந்தும், நோக்கத்திலிருந்து மட்டும்தான் பார்ப்பேன், உலகம் எப்படி பார்க்கிறது என்று நான் பார்க்கமாட்டேன் என்று சொன்னால் அது அவருடைய துர்திருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உங்களின் எண்ண ஓட்டத்தை மாற்றுங்கள். உலகம் எப்படிப் பார்க்கிறதோ அப்படித்தான் பார்க்க வேண்டும். பார்க்க முடியாது என்று சொன்னால், வெற்றிமாறன் பார்வையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்