Skip to main content

“முதலில் வரலாற்றை படியுங்கள்” - ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து குஷ்பூ

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

kushboo talk about ponniyin selvan movie

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகை குஷ்பு, “பொன்னியின் செல்வன் படம் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. இந்த மாதிரி ஒரு படத்தை மணிரத்னத்தால் மட்டுமே கொடுக்க முடியும். பல பேர் 'பொன்னியின் செல்வன்' படத்தை  எடுக்க முயற்சி பண்ணாங்க. ஆனால் யாராலும் முடியவில்லை. ஐந்து பாகங்கள் கொண்ட மிகப் பெரிய நாவலை இரண்டரை மணி நேர படமாகச் சொல்வது எளிமையான விஷயம் கிடையாது. ஆனால் மணிரத்னம் அதைச் செய்து காட்டியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போது ஒவ்வொரு கவிதையாக வடிவமைத்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் சிலர் வேண்டுமென்றே படம் குறித்து கலவையான விமர்சனத்தைப் பதிவிட்டும், ட்ரோல் செய்தும், மீம் போட்டும் கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களை பற்றி கவலையே படக்கூடாது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படமோ, தெலுங்கு படமோ அல்ல. ஒரு இந்திய படம். வரலாறு தெரியாமல் 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்கவில்லை. அதை பற்றி நன்கு ஆராய்ந்து. தேடித் தேடி படித்து முழுவதும் தெரிந்த பிறகு படத்தை அவர் இயக்கியுள்ளார். சும்மா சமூக வலைத்தளங்களில் மணிரத்னம் வரலாறு தெரியாமல் படத்தின் காட்சிகளைத் திரித்துள்ளதாகக் கூறுபவர்கள் முதலில் வரலாற்றைப் படித்துவிட்டு, பிறகு இதுபோன்ற விமர்சனத்தை முன்வையுங்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்