Skip to main content

'சர்கார்' தமிழ் டைட்டிலா? பிரபல நடிகரின் கேள்வியால் சர்ச்சை!

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
karunakaran

 

இப்போது சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட்டில் இருப்பது நடிகர் கருணாகரன் விஜய் ரசிகர்களுடன் போட்டுக்கொண்டிருக்கும் சண்டை தான். கடந்த சில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கும் இந்த சண்டையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தன் போஸ்டுகளுக்கு மோசமாக கமன்ட் பதிவிட்டு வருவதால்  எனக்கு விஜய்யை பிடிக்காமல் போய்விட்டது என கருணாகரன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய்யை விமர்சிக்கும் வகையில் சில பதிவுகளை போட்டுள்ளார்.

 

 

 

அதில்... "ஒரு நடிகரின் ரசிகர்கள் போடும் கமெண்டை வைத்து தான் அந்த நடிகரின் தரத்தை சொல்ல முடியும்"  என்றும் பின், "முட்டாள்தனமான கேள்விகள் கேக்காதீர்கள் குழந்தைகளே. நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். நான் எப்போதாவது 'சர்கார்' தமிழ் டைட்டிலா..? என கேட்டேனா..?" என்றும் பின், "சர்கார் அடிமைகளே அடுத்த கேள்வி என் தாய் மொழியில் கேட்கப்போகிறேன்" என்றும் பின்,  "எனக்கு ஆதரவு தருகின்றேன் என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்" என்று பதிவிட்டு மேலும் சில கருத்துக்களையும்  பதிவிட்டுள்ளார். கருணாவின் இந்த ட்விட்டுகளுக்கு விஜய்-அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருவது திரையுலகில் சர்ச்சையும், சலசலப்பும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்