Skip to main content

"விஜய் ஒப்புக்கொண்டால்..." - விருப்பத்தை தெரிவித்த கமல்ஹாசன்

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

kamalhaasan joins vijay new movie

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 'விக்ரம் 3' படத்தில் நடிகர் விஜய்யை எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல், "விக்ரம் 3 படத்திற்காக ஒரு ஹீரோவை ஏற்கனவே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என நடிகர் சூர்யா குறித்து சூசகமாக தெரிவித்தார். அத்துடன் விஜய் ஒப்புக்கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்கவும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது" எனவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்