Skip to main content

ஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்தது. இதில் ஒரு பெண்ணாக கலந்துகொண்ட ஜூலி என்ற பெண் திடீரென பிரபலமடைந்தார். இதனையடுத்து அந்த வருடம் நடைபெற்ற முதலாம் சீசன் பிக்பாஸில் ஜூலியும் ஒரு போட்டியாளராக பங்குபெற்றார். 
 

julie

 

 

இதனையடுத்து அந்த போட்டியில் அவரின் நடத்தை பலருக்கும் பிடிக்காமல் போனது. பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறியவுடன் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இன்றுவரை அவர் ஹீரோயினாக நடித்து எந்த படமும் வெளியாகவில்லை.
 

இரண்டாவது சீசன் பிக்பாஸில் பங்கேற்பதற்கு முன்பாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா நடித்திருந்தார். பிக்பாஸை விட்டு வெளியே வந்தபின்பு சக போட்டியாளர் மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா படத்திலும், PUBG என்ற படத்தில் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்.
 

இதில் PUBG படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் பிக்பாஸின் முதல் சீசன் போட்டியாளர் ஜூலியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்