Skip to main content

தாமதமாக வெளியாகும் கமல் - ஷங்கரின் ‘இந்தியன் 2’

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
indian 2 release update

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்பு படப்பிடிப்பு நடந்து வந்தது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டு பாக படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் தேதி, குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஜூன் 13 வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் பிரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஐ.பி.எல். போட்டியில் கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது. மே 22ஆம் தேதி முதல் பாடல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிப்பும் வெளியானது. ஜூலை 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ஜூன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஒரு மாதம் தள்ளி வெளியாகவுள்ளது. 

சார்ந்த செய்திகள்