Skip to main content

"விஜய் தேவரக்கொண்டாவுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை" - பிரபல நடிகை குற்றச்சாட்டு

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

ijay Deverakonda anasuya issue

 

தெலுங்கு திரையுலகில் நடிகையாக வலம் வருபவர் அனுசுயா பரத்வாஜ். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரபலம் அடைந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் சுனிலுக்கு மனைவியாக நடித்து பலரது கவனம் பெற்றார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று வெளியாகியுள்ள 'விமானம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார்.

 

அந்த வகையில் ஒரு பேட்டியில் விஜய் தேவரக்கொண்டா ரசிகர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பற்றி கூறியுள்ளார். அவர் கூறுகையில், "நானும் விஜய் தேவரக்கொண்டாவும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தோம். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. அர்ஜுன் ரெட்டி வெளியான போது ஒரு திரையரங்கிற்கு விஜய் தேவரக்கொண்டா சென்றிருந்தார். அப்படத்தில் அவர் மோசமான வசனங்கள் பேசியிருந்த நிலையில் திரையில் அந்த வசனங்கள் மியூட் செய்யப்பட்டன. அப்போது ரசிகர்களிடம் அந்த வசனத்தை பேசுமாறு சொன்னார். ரசிகர்களும் அந்த வசனத்தை சத்தமாக கத்தினர். படத்தில் ஒரு மோசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அது பரவாயில்லை. 

 

ஆனால் நிஜத்தில் அதை ஏன் ரசிகர்களிடம் ஊக்குவிக்கிறார். ஒரு தாயாக இந்த சம்பவம் வேதனையை அளிக்கிறது. இது குறித்து விஜய் தேவரக்கொண்டாவிடம் பேசினேன். தயவு செய்து நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆனால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் என்னை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். ரசிகர்களை அவர் கட்டுப்படுத்தவில்லை. மேலும் அவரது குழுவில் இருக்கும் ஒரு முக்கிய நபர் எனக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். விஜய்க்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அவரது தூண்டுதலின் பெயரில் தான் நடக்கிறது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்