Skip to main content

தமிழுக்கு வரும் நாகர்ஜுனாவின் மகன் 

Published on 28/01/2019 | Edited on 28/01/2019
hello

 

 

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா – அமலா தம்பதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் வெளியான 'ஹலோ' படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரம்யாகிருஷ்ணன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர்  ஆகியோரும் நடித்துள்ளனர். ரொமாண்டிக் ஆக்ஷன், திரில்லர் கலந்த பக்கா கமர்ஷியல் சினிமாவாக இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் படம் வருகிற பிப்ரவரி 8ஆம்  தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்