Skip to main content

பிளாக் மார்க் வாங்கிய ஹன்சிகா

Published on 14/03/2018 | Edited on 15/03/2018

han


தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகா சமீபத்தில் பொங்கலுக்கு வெளிவந்த குலேபகாவலி படத்தில் நடித்தார். இதையடுத்து அவர்  மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் 'துப்பாக்கி முனை' மற்றும் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படங்களின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஹன்சிகா மீது சிம்ரன், மாளவிகா உள்பட சில தமிழ் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்த முனுசாமி தற்போது ஹன்சிகாவுக்கும் மானேஜராக பணி புரிந்து கொண்டிருக்கும் அவர் ஹன்சிகா மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்... தான் இதுவரை பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதை நடிகர் சங்கம் பெற்றுத் தரும்படியும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்