Skip to main content

'மாறன்' படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

gv prakash kumar released dhanush starring maaran movie new update

 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

ad

 

இந்நிலையில், 'மாறன்' படத்தின் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதில்,"'மாறன்' படத்தின் பின்னணி இசைக்கான பணியை இன்று தொடங்கியுள்ளோம், இது படத்தின் அதிரடி ஆக்சன் இசையாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்