Skip to main content

‘தமிழனா பொறந்தது தப்பா சார்...’ - உண்மைச் சம்பவ கதையில் ஜி.வி. பிரகாஷ்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
GV Prakash Kumar Rebel trailer released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார்.

இதனிடையே ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் ரெபல் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க கருணாஸ், வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இசைப் பணிகளையும் கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. மேலும் இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரைலரில், கேரளாவிற்கு கல்லூரி படிப்பு படிக்கச் செல்லும் தமிழர்களுக்கும் அங்கிருக்கும் ஒரு வகுப்பினருக்கும் மோதல் நடப்பதை விவரிக்கும் விதமாக ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும்,  “உன்னையெல்லாம் இங்க படிக்க விட்டதே தப்பு...’, ‘நாங்கெல்லாம் தமிழனா பொறந்தது தப்பா சார்...’, ‘மத்தவன் ஜெயிக்கறதுக்காக விழுந்த ஒவ்வொரு தமிழனுடைய ஓட்டும், இனிமேல் ஒரு தமிழனுக்காக மட்டும் தான் விழணும்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படம் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்