Skip to main content

கங்கனாவுடன் ஜி.வி பிரகாஷ்; வெளியான புதிய அறிவிப்பு 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

gv prakash joins kangana ranaut next movie

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாகட்' திரைப்படம் மோசமான வரவேற்பைப் பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 5 கோடி கூட வசூல் செய்யவில்லை எனப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க நடிகை கங்கனா அடுத்தாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை 'எமர்ஜென்சி' என்ற பெயரில் உருவாக்க கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், "நடிகை கங்கனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கனவு படத்தில் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்" என்று தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த பதிவில் எந்த படத்தில் பணிபுரிய போகிறார் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. ஒருவேளை எமர்ஜென்சி என்ற பெயரில் கங்கனா இயக்கி நடிக்கும் படத்தில் ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவாரா அல்லது வேறு ஏதேனும் புதிய படமாக இருக்குமா என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்