Skip to main content

கீழடி இளைஞரை பாராட்டிய ஜி.வி பிரகாஷ் படக்குழு

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

GV Prakash iynkaran film crew appreciate the youth from keeladi

 

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரவியரசு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'ஐங்கரன்'. இப்படத்தில்
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்கள். 'காமன்மேன்' நிறுவனம் சார்பாக பி.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்பு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் கூட அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ் இப்படத்தை பாராட்டியிருந்தார்.

 

இந்நிலையில் 'ஐங்கரன்' படக்குழு கீழடியை சேர்ந்த கெளதம் என்ற இளைஞரை பாராட்டியுள்ளனர். கீழடியில் பொறியியல் பட்டதாரியான கெளதம் 2.80 லட்சத்தில் பேட்டரியில் இயங்கும் ஜீப்பை தயாரித்துள்ளார். இந்த ஜீப்பை ஒரு முறை சார்ஜ் செய்தால் 280 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார். கவுதமின் இச்செயலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் 'ஐங்கரன்' படக்குழு வெகுவாக பாராட்டியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்