Skip to main content

சிபிராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

The film crew released the First Look poster of sibiraj 'vattam' movie

 

'ரங்கா' படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'மாயோன்'. கிஷோர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். த்ரில்லர் ஜானரில் வெளிவந்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை அடுத்து 'ரேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கமலக்கண்ணன் இயக்கத்தில் 'வட்டம்' படத்தில் நடிக்கிறார். 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா, அதுல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். 

 

இந்நிலையில் 'வட்டம்'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சிபிராஜ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டரை சிபிராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்